

முதன்முதலாக திரைத்துறையில் தேசிய விருது பெற்ற பாடகி பி.சுசீலா. திரைப்பாடலாக இருந்தாலும் அருள் பாடலாக இருந்தாலும் சுசீலாவின் குரலால் அந்தப் பாடலின் இனிமை மேலும் மெருகேறிவிடும். உலக ரட்சகர் இயேசு பிரான் அவதரித்த செய்தியையும் அற்புதங்களையும் விளக்கும் எண்ணற்றகிறிஸ்துவப் பாடல்கள் புதிது புதிதாக பாடப்பட்டாலும், இந்தத் தலைமுறைக்கு அதிகம் அறிமுகமில்லாத பாடல் இது.
“தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே...
அதைத் தேடியே நாடி ஓடியே
வருவீர் திருச்சபையானோரே...”
- என்னும் பாடலில் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும் தெய்வாம்சத்தை கேட்பவர்கள் அனைவருக்கும் கடத்தும் அவரின் மகிமையான குரல். அப்படிப்பட்ட அந்தப் பாடலின் யூடியூப் பதிவு இது.
சுவிசேஷ கீதங்களும் தேவாலயத் திருப்பணிப் பாடல்களும் மதமாச் சரியங்களைக் கடந்து எல்லாரின் காதுகளிலும் தேன் பாய்ச்சும் இந்த மாதத்தில் பி.சுசிலாவின் `தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்’ பாடலைக் காண:
காணொளியில் காண: https://shorturl.at/hsw12