

இயந்திரக் களையெடுப்பு (கோப்புப் படம்)
நெல் சாகுபடியில் களைகள் என்பவை பயிரோடுபோட்டி போட்டுக்கொண்டு சத்துக்கள், நீர் மற்றும் சூரிய ஒளியைப் பகிர்ந்துகொள்பவை. இவை மகசூலை 30%முதல் 50% வரை குறைக்கக்கூடியவை.
ரசாயனக் களைக்கொல்லிகள் மண்ணின் வளத்தையும், மனித ஆரோக்கியத்தையும் பாதிப்பதால், இயற்கை முறையில் களை மேலாண்மை செய்வது அவசியமாகிறது.
கோடை உழவு: களை மேலாண்மையில் கோடை உழவு மிகவும் முக்கியமானது. கோடையில் நிலத்தை ஆழமாக உழுவதால், மண்ணுக்கு அடியில் இருக்கும் களைகளின் விதைகள், வேர்கள் மற்றும் கிழங்குகள் மேலே கொண்டு வரப்படுகின்றன. இவை சூரிய வெப்பத்தில் காய்ந்து அழிந்துவிடும்.