நிலமும் வளமும்
வாழ்க்கையில் ஜெயிக்கணுமா? - வெண்பன்றி வளர்த்து பாருங்க...!
கால்நடை வளர்ப்புத் தொழிலில், எந்த உயிரினங்கள் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கேட்டால், வெண்பன்றி வளர்ப்பில்தான் அதிக லாபம் கிடைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
வெண்பன்றி வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடியது. ‘பன்னி பல குட்டிப் போடும்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான். குறைந்த சினைக்காலமும், அதிக எண்ணிக்கையில் குட்டிகள் போடுவதும், மற்ற கால்நடைகளை விட மிக விரைவான உடல் வளர்ச்சியும் வெண்பன்றிகளின் சிறப்பு அம்சமாகும். இவைதான் அதிக லாபம் கிடைக்க முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
