

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளவில் உர விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரசாயன உரங்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. உரத் தட்டுப்பாட்டால் நம் நாட்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆய்வு நிறுவனத்தின் (ICAR-CIBA) விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளனர். சந்தைகளில் வீணாகும் மீன் கழிவுகளைக் கொண்டு, மண்ணுக்கும் பயிருக்கும் நன்மை விளைவிக்கும் இரண்டு உயிரி உரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
கழிவில் விளைந்த உரம்
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 195 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அதனால், 60 லட்சம் டன் மீன் கழிவுகள் உற்பத்தியாகி, சுற்றுப்புறத்தைச் சீரழிக்கின்றன.
இந்தக் கழிவுகளிலிருந்து 'சிபா – பிளாங்க்டன் பிளஸ்' மற்றும் 'சிபா – ஹார்ட்டி பிளஸ்' ஆகிய இருவகை ஊட்டச்சத்து உயிரி உரங்களை முற்றிலும் இயற்கை முறையில் சிபா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.