சந்தன மரக்கன்றுகள் வளர்ப்பில் சாதிக்கும் கிராமம்: ஆண்டு முழுவதும் வருமானம்!

விற்பனைக்கு தயார்நிலையில் உள்ள கன்றுகள்.

விற்பனைக்கு தயார்நிலையில் உள்ள கன்றுகள்.

Updated on: 
2 min read

சந்தன மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்வதில், திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏ.வெள்ளோடு கிராம விவசாயிகள் முன்னோடியாகத் திகழ்கின்றனர்.

மலை​யடி​வாரப் பகுதி என்ப​தால், தொடக்​கத்​தில் திராட்​சைச் சாகுபடிக்கு விவசா​யிகள் முக்​கி​யத்துவம் கொடுத்து வந்தனர். காலப்​போக்​கில் திராட்சை விவசா​யத்​தில் அதிகப் பராமரிப்பு, கூடு​தலான மருந்துச் செலவு, தொழிலா​ளர்கள் பற்றாக்​குறை​யால் பணிகள் பாதிப்பு, மழைக்​காலங்​களில் லாபக் குறைவு எனப் பல பிரச்சினைகளை எதிர்​கொண்​டனர்.

இதனால், வேறு சாகுபடிக்கு மாறத் தொடங்​கினர். சிலர் மரக்​கன்​றுகளை வளர்க்​கும் நாற்​றங்​கால் (நர்​சரி) தொழிலில் ஆர்வம் காட்​டினர். இதில் குறிப்​பாகச் சந்தன மரக்​கன்​றுகள் வளர்ப்​பிற்கு முக்​கி​யத்துவம் கொடுத்​தனர். இதையறிந்த பலரும் இவர்​களைப் பின்​பற்றி, தற்போது சந்தன மரக்​கன்று வளர்ப்​பில் அதிக லாபம் ஈட்டி வருகின்​றனர்.

இத்தொழிலில் ஆண்டு முழு​வதும் நேரடி​யாக​வும் மறைமுக​மாக​வும் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட விவசாயத் தொழிலா​ளர்​களுக்​குத் தினமும் வேலை​வாய்ப்பு கிடைக்​கிறது.

சந்தனம், செம்​மரம், தேக்கு, வேம்பு, புங்​கன், நாவல், இலுப்பை, நீர்​மருது, செண்​பகம், ஆவி, மகாகனி, வில்​வம், சில்வர் ஓக், மே பிளவர், மஞ்சள் கொன்றை, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, நாரத்தை, கருவேப்​பிலை, சவுக்கு உட்பட 40-க்​கும் மேற்​பட்ட வகையான கன்றுகளை இப்பகுதி விவசா​யிகள் உற்பத்தி செய்​கின்​றனர்.

Loading content, please wait...

X