

வயல்களில் நடைபெறும் உழவுப் பணி.
சிவகங்கை மாவட்டத்தில், வாழ வழியின்றி ஊரே காலியான நாட்டாகுடி கிராமத்தை, ‘வேப்பங்குளம் விவசாய மாடல்’ மூலம் ஒரு பட்டதாரி இளைஞர் மீட்டுள்ளார். கல்லல் அருகே வேப்பங்குளம் ஊராட்சியில் புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல், தெம்மாவயல் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 600 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன.
வானம் பார்த்த பூமியாக இருந்த இக்கிராமங்களில் வறட்சி, கால்நடைகள் தொல்லை, விளைபொருட்களுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பலரும் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப்பட்டனர். விவசாயத்தை இழந்த அந்த கிராமத்தில், விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் அப்பகுதியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான திருச்செல்வம் களத்தில் இறங்கினார்.
திருச்செல்வம்