பண்ணைக்குட்டையால் இருபோகக் கத்தரி சாகுபடி: வழிகாட்டுகிறார் முன்னோடி விவசாயி முனியாண்டி

கத்தரிக்காய் தரம் பிரிக்கும் பணி

கத்தரிக்காய் தரம் பிரிக்கும் பணி

Updated on: 
2 min read

வானம் பார்த்த கரிசல் பூமியில் பண்ணைக்குட்டை அமைத்து, இருபோகக் கத்தரி சாகுபடியை மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியாண்டி சாத்தியப்படுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே​யுள்ள மாரந்தை கிராமம் வானம் பார்த்த கரிசல் பூமிப் பகுதி​யாகும். இங்குள்ள பெரும்​பாலான விவசா​யிகள் முன்பு மிளகாய் சாகுபடி செய்து வந்தனர். போதிய லாபம் கிடைக்​காததால் பலரும் விவசா​யத்தைக் கைவிட்டுத் தங்களது நிலங்​களைத் தரிசாக விட்டனர்.

அப்படிச் செய்ய மனமில்லாத விவசாயி எம். முனியாண்டி (52), பண்ணைக் குட்டை மூலம் அவ்வப்போது பெய்யும் மழைநீரைச் சேகரித்துக் கத்தரி சாகுபடி செய்து வருகிறார். இருபோகம் விளைவித்து அதில் போதிய வருவாய் கிடைப்​ப​தால், கடந்த 20 ஆண்டு​களாகத் தொடர்ந்து கத்தரி சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: “எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இருபது ஆண்டு​களுக்கு முன்பு, 5 ஏக்கரிலும் மிளகாய் சாகுபடி செய்தேன். ஒரு சம​யத்தில் நோய்த் தாக்குதலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், விவசா​யத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்​பட்​டேன்.

அப்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பண்ணைக்​குட்டை வெட்டித் தருவதைக் கேள்விப்​பட்​டேன். அதிகாரிகளை அணுகி, 2005ஆம் ஆண்டு 40 அடி நீளம், 21 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்ட பண்ணைக்​குட்டையை அமைத்​தேன். அந்தப் பண்ணைக்​குட்டை நீரைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கரில் நாட்டு ரகக் கத்தரியைச் சாகுபடி செய்து வருகிறேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in