மண்ணின் வளமும் உற்பத்தித்திறனும்

மண்ணின் வளமும் உற்பத்தித்திறனும்
Updated on
1 min read

மண் வளம் என்பது மண்ணின் தற்போதைய நிலையைக் குறிப்பதாகும். பயிர்கள் உடனடியாக வளர்வதற்குத் தேவையான வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பண்புகளின் தற்போதைய சூழலே மண் வளம் எனப்படுகிறது.

இது மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய முதன்மைச் சத்துகள், கந்தகம், கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளின் இருப்பை உள்ளடக்கியது.

மேலும், மண்ணின் கார அமிலத்தன்மை, நுண்ணுயிர் செயல்பாட்டுக்கான ஆற்றல் மூலமாக விளங்கும் மட்குப் பொருளின் அளவு, மண்ணின் நயம், கட்டமைப்பு, காற்றோட்டம் மற்றும் நீர்பிடிப்புத் திறன் போன்ற இயற்பியல் நிலைகளும் இதில் அடங்கும்.

இத்தகைய மண் வளத்தை மண் பரிசோதனை, ஆய்வக பகுப்பாய்வு மற்றும் வயல்வெளி அவதானிப்புகள் மூலம் அளவிட முடியும். கார அமிலத்தன்மை, மின் கடத்துத்திறன், மட்குப் பொருளின் சதவீதம், ஊட்டச்சத்து அளவுகள் போன்றவை இதற்கான குறிகாட்டிகளாகும். இந்த வளமானது மனித உள்ளீடுகள் மூலம் விரைவாக மாறக்கூடிய பண்பைக் கொண்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in