குழித்தட்டுல நாற்று உற்பத்தி: லட்சக் கணக்குல வியாபாரம்

குழித்தட்டுல நாற்று உற்பத்தி: லட்சக் கணக்குல வியாபாரம்

Published on

காய், கனி, பூ விவ​சா​யத்​தில் நேரடி​யாக விதை விதைக்​காமல், நாற்று நடும் முறையையே விவ​சா​யிகள் பின்​பற்றி வரு​கின்​றனர். இதற்​காக மேட்​டுப்​பாத்தி அமைத்​து, மண்​ணில் நேரடி​யாக விதையை விதைத்து நாற்று உரு​வாக்​கப்​படும். வளர்ந்த நாற்​றுகளை பறித்து சாகுபடி நிலத்​தில் ஊன்றி பராமரிக்​கப்​பட்டு வந்​தது.

இந்த முறை​யில் நாற்​றுகள் சீரான வளர்ச்சி இல்​லாததும், நாற்​றுகளை பறிக்​கும் போது வேர்​கள் அறுந்​து​விடு​வ​தா​லும் இழப்பு ஏற்​படு​கிறது. இதைத் தவிர்ப்​ப​தற்​காக, பிளாஸ்​டிக் குழித்​தட்​டு​களில் கன்​றுகளை உற்பத்தி செய்​யும் நவீன தொழில்​நுட்​பம் பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது.

இந்த முறை​யில் நாற்​றுகளை உற்பத்தி செய்​து, விற்​பனை செய்து வரு​கிறார் புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி வட்​டம் கொத்​தமங்​கலம் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த எஸ்​.ச​தானந்​தம்.

இது குறித்து சதானந்​தம் கூறிய​தாவது: சிறு வயதில் இருந்து எனக்கு நாற்று உற்பத்தியில் அதீத ஆர்​வம் உண்டு. தொடக்கத்தில் பாத்தி அமைத்து கத்​திரி, தக்​காளி, மிள​காய் ஆகிய காய், கனி நாற்​றுகளை தயாரித்து விற்​பனை செய்து வந்​தேன். அதில், வேர் அறுந்து விடு​வ​தால் இழப்பு ஏற்​பட்​டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in