எருக்கு இலை போரான் சத்து தரு​மா? | மீளுருவாக்க விவசாயம்

எருக்கு இலை போரான் சத்து தரு​மா? | மீளுருவாக்க விவசாயம்
Updated on
2 min read

சமீபத்​திய ஆய்வு முடிவு​களின்​படி, தமிழ்​நாட்​டின் விவ​சாய நிலங்​களில் கிட்​டத்​தட்ட 50 சதவீத நிலங்​களில் போரான் சத்து பற்​றாக்​குறை இருப்​ப​தாகக் கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இயற்கை விவ​சா​யத்​தில் பல பாரம்​பரிய முறை​கள் பெரும் பலன் தந்​தா​லும், சில நம்​பிக்​கைகள் அறி​வியல் ஆய்​வு​களுக்கு உட்​ப​டா​மல் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. அதில் முதன்​மை​யான ஒன்​று: “எருக்கு இலை போரான் சத்து நிறைந்​தது; அதன் கரைசல் பயிர்​களின் போரான் பற்​றாக்​குறையைப் போக்​கும்” என்ற கருத்து ஆகும்.

கள யதார்த்​த​மும் தாவர உடலியலும் (Plant Physiology) என்ன சொல்​கின்றன என்​ப​தைப் பார்ப்​போம். எருக்கு இலைகளை ஆய்​வகப் பரிசோதனைக்கு உட்​படுத்​திய அறி​வியல் முடிவு​கள் எவற்றிலும், அது குறிப்​பிடத்​தக்க அளவில் போரான் சத்​தைக் கொண்​டிருப்​ப​தாக நிரூபிக்​கப்​பட​வில்​லை.

மாறாக, எருக்​குச் செடி​யில் பொட்​டாசி​யம், கால்​சி​யம், குளோரின் போன்ற தாதுக்​களே பிர​தான​மாகக் காணப்​படு​கின்​றன. அறி​வியல் பூர்​வ​மாக இல்​லாத ஒரு மூலப்​பொருளை, போரான் சத்​துக்​கான முதன்​மைத் தீர்​வாகக் கருது​வது விவ​சா​யிகளுக்கு ஏமாற்​றத்​தையே தரும்.

போரான் என்​பது பயிர்​களில் பூக்​கள் மலர்​வதற்​கும், மகரந்​தச் சேர்க்கை சிறப்​பாக நடை​பெறு​வதற்​கும், காய்​கள்​-பழங்​கள் பிடிப்​ப​தற்​கும் அவசி​ய​மான ஒரு நுண்​ணூட்​டச்​சத்து ஆகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in