கேள்விகளும்? பதில்களும்! | மீளுருவாக்க விவசாயம்

கேள்விகளும்? பதில்களும்! | மீளுருவாக்க விவசாயம்
Updated on
2 min read

ரசாயன உரங்​களால் மண் சீரழி​வதும், இயற்கை விவ​சா​யத்​தால் உடனடி​யாக ஏற்​படும் விளைச்​சல் வீழ்ச்​சி​யும் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாதிக்​கின்​றன. மேலும், காலநிலை மாற்​ற​மும் இதற்​குப் பெரும் சவாலாக உள்​ளது.

எனவே, இயற்கை வேளாண்​மை​யின் அடிப்​படை நெறி​முறை​களு​டன், நவீன அறி​வியலை​யும் இணைக்​கும் ‘மீளுரு​வாக்க விவ​சாய முறை’ (Regenerative Agriculture) மட்​டுமே மண்​ணை​யும், விளைச்​சலை​யும், விவ​சா​யிகளின் எதிர்​காலத்​தை​யும் பாது​காக்​கும் சிறந்த தீர்​வாகும் என்று மீளுரு​வாக்க விவ​சாய ஆலோ​சக​ரான ரவிசங்​கர் கருப்​பையா கூறுகிறார்.

இது தொடர்​பாக இம்​மாதம் 14, 21 ஆகிய தேதி​களில் ‘இந்து தமிழ் திசை’​யின் ‘நில​மும் வளமும்’ பக்​கத்​தில் அவருடைய கட்​டுரைகள் வெளி​யா​யின. அந்​தக் கட்​டுரைகள் தொடர்​பாக வாசகர்​கள் எழுப்​பி​யிருந்த கேள்வி​கள் சில​வற்​றுக்கு இந்த வாரம் அவர் பதிலளிக்​கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த ரசாயன​மும் நவீன தொழில்​நுட்​ப​மும் இன்றி உலக மக்​கள் தொகைக்கு உணவு தந்த பாரம்​பரிய விவ​சாய முறையை, ‘சாத்​தி​ய மற்​றது’ என்று முடிவு​கட்​டு​வது அவசரப்​பட்டு எடுக்​கப்​படும் முடிவு அல்​ல​வா?

ஒரு விவ​சா​யிக்கு மகசூல்​தான் முக்​கியம் என்​பது உண்​மை. 1800இல் உலக மக்​கள் தொகை 100 கோடி இன்று 830 கோடி. எல்லா மக்​களுக்​கும் உணவு தர பாரம்​பரிய விவ​சா​யத்​தால் முடி​யாது. இதனை யாரும் மறுக்க முடி​யாது. இந்​தச் சூழலில், ரசாயன விவ​சா​யம் மகசூலை அதி​கரித்​துத் தந்​தது. அதே நேரத்​தில், மண்​ணைக் கொன்​றது, நீரை மாசுபடுத்​தி​யது, உடலை நோயுறச் செய்தது.

மீளுரு​வாக்க விவ​சா​யம் என்​பது இந்த இரண்​டுக்​கும் இடையி​லான பாதை. இந்த விவ​சாய முறையில், மகசூல் குறை​யாது; மண் வளம பெருகும்; மண்​ணின் நீர்ப்​பிடிப்​புத் திறன் அதி​க​மாகும்; இடு​பொருள் செலவு குறை​யும். பாரம்​பரிய விவ​சா​யத்​தைக் கைவிட​வில்​லை. அதன் அறிவை எடுத்​து, இன்​றைய நவீன அறி​வியலுடன் இணைக்​கிறோம். இது​தான் மீளுரு​வாக்க விவ​சா​யம். இது காலத்​தின் கட்டா​யம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in