தோட்டக்கலை சாகுபடியின் வெற்றிக்கு உதவும் கவாத்து

தோட்டக்கலை சாகுபடியின் வெற்றிக்கு உதவும் கவாத்து
Updated on
2 min read

தோட்டக்கலை சாகுபடியில் கவாத்து (Pruning) என்பது மிக முக்கியமானதொரு தொழில் நுட்பமாகும். முறையாகச் செய்யப்படும் கவாத்து, தாவரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி, அவற்றின் வீரியமான வளர்ச்சிக்கும் வியக்கத்தக்க மகசூல் பெருக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

அறிவியல்பூர்வமான இக்கலையைக் கற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள், முதன்மையாக கவாத்துக்கான கருவிகள் (Tools), நுட்பம் (Technique) மற்றும் சரியான காலம் (Timing) ஆகிய ‘3T’ கோட்பாடுகளைத் துல்லியமாக அறிந்திருப்பது அவசியமாகும்.

கருவிகள்

கவாத்து செய்யும்போது தாவரங்களின் திசுக்கள் சிதைந்தாலோ அல்லது கிழிந்தாலோ அப்பகுதிகளில் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். ஆகவே, கூர்மையான மற்றும் தூய்மையான கருவிகளைத் தேர்வு செய்வதே கவாத்து பணியின் முதல் படியாகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in