

கீழக்கணவாய் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சப்பாத்திக்கள்ளி.
வறண்ட பூமியான பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. ஆனால், அண்மைக்கால தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வருவாய் இழப்பு காரணமாக, இப்பகுதி விவசாயிகள் தங்களின் மண் வளம், தண்ணீர் தேவைக்கேற்ப மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர்.
புதிய சாதனை
இச்சூழலில், பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முற்றிலும் வித்தியாசமாகச் சிந்தித்து புதிய சாதனை படைத்துள்ளார். பொதுவாக கிராமங்களில் விஷத்தன்மை கொண்டது என ஒதுக்கப்படும் சப்பாத்திக்கள்ளியை, மருத்துவ குணங்கள் நிறைந்த பயிராக அவர் சாகுபடி செய்து வருகிறார்.
விவசாயி சுரேஷ் தேவராஜ் இதுகுறித்துக் கூறுகையில், “முன்பு நெல், சின்ன வெங்காயம், காய்கறிகளைப் பயிரிட்டேன். வரவை விட செலவு அதிகமாகி நஷ்டமே மிஞ்சியது.