சுபாஷ் பாலேக்கர் வழியில் ஒரு முன்னோடி விவசாயி: மண்ணைப் பாதுகாத்தால் மனிதர்களைக் கைவிடாது

பழனிமலையின் பல அடுக்கு தோட்டம். (உள்படம்)  பழனிமலை

பழனிமலையின் பல அடுக்கு தோட்டம். (உள்படம்)  பழனிமலை

Updated on
2 min read

மண்​ணின் ஆரோக்​கியமே மனிதகுலத்​தின் ஆரோக்​கி​யம் என்​பதை உணர்ந்​து, இயற்கை விவ​சா​யத்​தில் ஒரு புரட்​சியை ஏற்​படுத்தி வரு​கிறார் சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த விவ​சாயி பழனிமலை. மனநிம்​மதி தேடிப் பல்​வேறு தொழில்​களைச் செய்து பார்த்த அவருக்​கு, இறு​தி​யாகத் தாய் மண்​ணின் மணம்​தான் அமை​தி​யை​யும் கவுர​வ​மான வாழ்​வா​தா​ரத்​தை​யும் வழங்​கி​யுள்​ளது.

மேட்​டூர் அரு​கே​யுள்ள நங்​கவள்​ளிப் பகு​தி​யில் பல அடுக்​குச் சாகுபடி மற்​றும் நுட்​ப​மான நீர் மேலாண்மை மூலம் ஒரு வெற்​றிகர​மான இயற்கை வேளாண் மாதிரி பண்​ணை​யை அவர் உருவாக்கியுள்​ளார்.

மாற்​றத்​தைத் தந்த அடை​யாறு பயணம்

நங்​கவள்​ளி, ஜலகண்​டாபுரம் மற்​றும் எடப்​பாடி பகு​தி​களில் புகை​யிலை சாகுபடி என்​பது நீண்​ட​கால​மாக முதன்​மை​யான தொழிலாக இருந்து வரு​கிறது. நல்ல வரு​மானம் கிடைத்த காரணத்​தால், பழனிமலை​யும் தொடக்​கத்​தில் புகை​யிலை பயி​ரிடு​வ​திலேயே ஆர்​வம் காட்​டி​னார்.

ஆனால், புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்ட தனது நண்​பரைச் சிகிச்​சைக்​காகச் சென்னை அடை​யாறு புற்​று​நோய் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​ற​போது, அங்கு புகை​யிலை பயன்​பாட்​டால் ஏற்​படும் கொடிய பாதிப்​பு​களை நேரில் கண்​டார்.

மக்​களின் உயிருக்கு உலை​வைக்​கும் ஒரு பொருளைத் தான் விளைவிக்​கக் கூடாது என்ற உறு​தி​யான முடிவை அப்போது எடுத்​தார். அந்​தப் பயணத்​திற்​குப் பிறகு புகை​யிலை சாகுபடியை முற்​றி​லு​மாகக் கைவிட்ட அவர், கடந்த 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக ரசாயன உரங்​களை​யும் அறவே தவிர்த்து வரு​கிறார்.

நீர் மேலாண்​மை​யில் ஒரு புதிய வழி​முறை

இவரது 5 ஏக்​கர் நிலத்​தில் மா, சாத்​துக்​குடி, பப்​பாளி எனப் பலன் தரும் பழ மரங்​களு​டன், சுமார் 10 ஆயிரம் கறிவேப்​பிலை செடிகள் செழித்து வளர்ந்​துள்​ளன. மேலும் மஞ்​சள், இஞ்சி சாகுபடி​யும் நடை​பெறுகிறது. 700 மகாகனி மரக்​கன்​றுகளை நட்​டுள்ள இவர், அவற்​றில் மிளகுக் கொடிகளை ஏற்றி விடு​வதற்​கான பணி​களை மேற்​கொண்டு வரு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in