

இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி செய்பவர்கள், சாகுபடி உத்திகளை தொடர்ந்து முறையாக செய்து வந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக நம் கண்முன்னே பல வெற்றியாளர்கள் உருவாகி வருகின்றனர்.
கடந்த சம்பா பட்டம் முதல் இன்று வரை இயற்கை முறையில் சாகுபடி செய்த விவசாயிகளில், சிவன் சம்பா பாரம்பரிய நெல் ரகத்தில் நாமக்கல்லைச் சார்ந்த சுகன்யா ஏக்கருக்கு 2100 கிலோவும், சாந்தி 2200 கிலோவும் மகசூல் எடுத்துள்ளனர்.
தூயமல்லி பாரம்பரிய நெல் ரகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் 2400 கிலோவும், தென்காசி முருகன்ராஜ் 2100 கிலோவும் விளைச்சல் பெற்றுள்ளனர். பூங்கார் நெல் ரகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன் இருளன் 40 சென்டில் 400 கிலோவும், சொர்ணமசூரி பாரம்பரிய நெல்லில் ராணிப்பேட்டை மாவட்டம் பாண்டியன் ஏக்கருக்கு 1600 கிலோவும், கோ 55 பல்கலைக்கழக ரகத்தில் திருநெல்வேலி மாவட்டம் ப்ளோரா 2300 கிலோவும் விளைச்சல் கண்டு சாதித்திருக்கிறார்கள்.
ஆடுதுறை 51 ரகத்தில் செங்கல்பட்டு தனசேகரன் 2400 கிலோ, ஆடுதுறை 37 ரகத்தில் வந்தவாசி முருகன் 2300 கிலோ, பிபிடி நெல் ரகத்தில் நாமக்கல் பிரபாகரன் 2650 கிலோ என நல்ல மகசூலைப் பெற்றிருக்கின்றனர்.