

நான் அரசு வேளாண்மைத் துறையில் பணியாற்றியபோது, எல்லா அலுவலர்களும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஓடியாடி வேலை செய்தோம். ஆனால், விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் எவ்வளவு செலவு செய்தாலும் நஷ்டமே மிஞ்சியது.
நஷ்டத்தை தாங்க முடியாமல் இந்தியா முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நமது ஊரில் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.