

வேளாண்மையை பிரதான தொழிலாக கொண்ட நம் நாட்டில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கடந்த 1966-ல் பசுமைப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் ரசாயன உரங்கள், வீரிய ஒட்டு ரக விதைகள் ஆகியவற்றின் மூலம் வேளாண்மை உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. அதேசமயம், மேற்கண்ட நடைமுறைகளால் மண் வளம், இயற்கை வளம் பாதிக்கப்பட்டது.
மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் இயற்கை வேளாண்மை முறை குறித்து தற்போது நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இயற்கை மற்றும் ஆர்வலர் கூட்டுக்குழுவின் சார்பில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு கோவை கொடிசியா அரங்கில் கடந்த 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது.