பதிவேடுகளைப் பராமரியுங்க... பண்ணையில ஜெயிக்கலாம்...

பதிவேடுகளைப் பராமரியுங்க... பண்ணையில ஜெயிக்கலாம்...
Updated on
2 min read

விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதி லாபகரமாக நடத்துவதற்கு பண்ணைப் பதிவேடுகளைப் பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பண்ணையில் நடைபெறும் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், செலவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு லாபத்தை அதிகரிப்பதற்கும் இது உதவுகிறது.

முறையான பதிவேடுகள் இருந்தால் மட்டுமே விவசாயிகள் தங்களின் பண்ணை நிர்வாகத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியும். ஒரு பண்ணையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்கு இந்தப் பதிவேடுகள் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.

நிதி சார்ந்த பதிவேடுகள்

பண்​ணை​யின் பொருளாதார நிலையை அறிய நிதிப் பதிவேடுகள் மிக முக்​கிய​மானவை. ஒரு குறிப்​பிட்ட காலத்​தில் பண்ணைக்​குக் கிடைத்த மொத்த வருமானத்​திலிருந்து மொத்தச் செலவு​களைக் கழித்​தால் கிடைப்பதே லாபமாகும். இது பண்ணை லாபகரமாக இயங்கு​கிறதா என்ப​தைத் தெளி​வாகக் காட்டும்.

மாறாக, வருமானத்தை விடச் செலவுகள் அதிக​மாகும் போது அது நட்டத்தைக் குறிக்​கும். இத்தகைய நிதி நிலவரங்​களைத் துல்​லிய​மாகப் பதிவு செய்யக் கணக்குப் புத்​தகங்கள் மற்றும் ரசீதுகளைப் பராமரிப்பது அவசி​யம். ஒவ்வொரு முறை பணப்​பரி​மாற்றம் நடைபெறும் போதும் அதற்கான ரசீதுகளைச் சேகரித்து வைப்பது வருமானத்தை​யும் செலவை​யும் உறுதிப்​படுத்த உதவும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in