

விருதுநகர் அருகே வானம் பார்த்த வறண்ட பூமியை வண்ணமயமாக்கும் வகையில் நித்திய கல்யாணி சாகுபடி செய்து நல்ல விளைச்சலும் லாபமும் பார்த்து வருகிறார் விவசாயி முருகேசன் (51).
விருதுநகர் அருகே உள்ள பெரியபேராலியைச் சேர்ந்தவர் முருகேசன். தாத்தா காலத்திலிருந்து விசாயத் தொழில் மேற்கொண்டுவரும் இவர், மழை இல்லாமல் வறண்ட தனது விவசாய நிலத்தில், மருத்துவ பயிர்களான நித்தியகல்யாணி, நீல அவுரி, பூனைக்காளி, கடுகடுகாணம், மல்லி போன்றவைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், “எங்கள் பகுதி பாசன வசதி இல்லாத, வானம் பார்த்த பூமி. இங்கு பெரும்பாலும் மக்காச்சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற பயிர்களே அதிகம் பயிரிடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக காட்டுப் பன்றிகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன.