

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பெற்று வந்த தஞ்சாவூர் இளைஞர், தற்போது அந்த வேலையை உதறிவிட்டு, கிராமப்புறத்தில் முழு நேர விவசாயி ஆகிவிட்டார்.
தஞ்சையைச் சேர்ந்தவர் ஆர்.உதயகுமார்(41). ஆரம்பக் கல்வியை தஞ்சாவூரிலும், பின்னர் உயர் கல்வியை சென்னையிலும் படித்த அவர், எம்.பி.ஏ. பட்டம் பெற்று சென்னையிலேயே வசித்து வந்தார்.