கல்வி - காட்சி - பயிற்சி: ஒருங்கிணைந்த மாதிரி பண்ணை

கல்வி - காட்சி - பயிற்சி: ஒருங்கிணைந்த மாதிரி பண்ணை
Updated on
3 min read

தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கால்​நடை அறி​வியல் முதுகலை ஆராய்ச்சி நிலை​யம், காட்​டுப்​பாக்​கம் வளாகத்​தில், கால்​நடை அடிப்​படையி​லான ஒருங்​கிணைந்த மாதிரி பண்ணையை உரு​வாக்​கி​யுள்​ளது.

சிறு மற்​றும் நடுத்தர விவ​சா​யிகளின் வரு​மானத்தை நிலைநிறுத்​த​வும், நிலம் – நீர் – உயி​ரியல் வளங்​களை ஒருங்​கிணைத்து முழு​மை​யாக பயன்​படுத்​த​வும் இந்த மாதிரி பண்ணை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நிலப்​பரப்பு சிதறல், நீர் பற்​றாக்​குறை, காலநிலை மாற்​றம், சந்தை மாற்​றம் போன்ற சவால்​கள் விவ​சா​யத்​தில் அதி​கரித்து வரும் நிலை​யில், பல்​வேறு விவ​சாய மற்​றும் கால்​நடை தொழில்​களை, ஒரே நிலப்​பரப்​பில் ஒருங்​கிணைக்​கும் ஒருங்​கிணைந்த பண்ணை முறை எதிர்​கால நிலை​யான விவ​சா​யத்​திற்கு முக்​கிய தீர்​வாக கருதப்​படு​கிறது. இதனை நடை​முறை வடி​வில் காட்​டும் கல்வி – காட்சி – பயிற்சி மைய​மாக இந்த வளாகம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

ஒருங்​கிணைந்த பண்​ணை​யிலுள்ள பல்​வேறு பிரிவுகள்: இந்த ஒருங்​கிணைந்த பண்ணை வளாகம், பயிர், தோட்​டக்​கலை, கால்​நடை, கோழி, நீர்ப்​பறவை மற்​றும் தீவன உற்​பத்தி ஆகிய​வற்றை ஒரே பண்ணை அமைப்​பில் இணைக்​கிறது. ஒவ்​வொரு கால்​நடை, கோழி, வேளாண் பிரிவு​கள் ஒன்​றோடு ஒன்று வளச்சுழற்சி முறை​யில் தொடர்​புபடுத்​தப்​பட்​டுள்​ள​தால், கழி​வு​கள் குறைந்து உற்​பத்தி திறன் அதி​கரிக்​கும் வகை​யில் இப்​பண்ணை வளாகம் திகழ்​கிறது.

காய்​கறி மற்​றும் தோட்​டக்​கலைப் பகு​தி: வளாகத்​தின் முன் பகுதி முழு​வதும் காய்​கறி மற்​றும் தோட்​டக்​கலைப் பயி​ரிடலுக்​காக ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. பல்​வேறு காலநிலைக் காய்​கறிகள், வாழை மற்​றும் பழவகை மரங்​கள் இணைந்து வளர்க்​கப்​படு​கின்​றன. இந்​தப் பகு​தி​யில் இருந்து கிடைக்​கும் பயிர்க் கழி​வு​கள்

கால்​நடைகளுக்​குத் தீவன​மாக​வும், உரம் தயாரிப்​பிற்​கான மூலப்​பொருளாக​வும் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதன் மூலம் பண்ணை வளங்​கள் புறச்​சார்பு இன்றி வளச் சுழற்சி செய்​யப்​பட்டு உற்​பத்தி பொருளா​தா​ரம் மேம்​படுத்​தப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in