ஆண்டு முழுவதும் காய்க்கும் ஒட்டு எலுமிச்சை

புளியங்குடி அந்தோணிசாமி உற்பத்தி செய்யும் புதிய ரகக் கன்றுகள்
புளியங்குடி அருகேயுள்ள தனது எலுமிச்சைத் தோட்டத்தில் அந்தோணிசாமி.

புளியங்குடி அருகேயுள்ள தனது எலுமிச்சைத் தோட்டத்தில் அந்தோணிசாமி.

Updated on: 
2 min read

தென்காசி மாவட்டம், புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எலுமிச்சை விவசாயத்தில் புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி மிகவும் பிரபலமானவர். பொதுவாக, ஆண்டின் இரு பருவங்களில் மட்டுமே எலுமிச்சை மகசூல் அதிகமாக இருக்கும். ஆனால், அந்தோணிசாமியின் தோட்டத்தில் ஆண்டின் எல்லாக் காலங்களிலும் எலுமிச்சை விளைச்சல் இருக்கிறது. அதற்குக் காரணம் இவர் சாகுபடி செய்துள்ள ஒட்டு எலுமிச்சை. இவர் சொந்தமாக ஒட்டு எலுமிச்சையை உற்பத்தி செய்து சாகுபடி செய்துள்ளார். மற்ற விவசாயிகளுக்கும் இந்த ஒட்டு எலுமிச்சைக் கன்றுகளை விற்பனை செய்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “எனக்கு 84 வயதாகிறது. 17 வயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் வரும். எலுமிச்சையை வனவிலங்குகள் சேதப்படுத்தாது என்பதால், புளியங்குடி அருகே மலையடிவாரத்தில் 20 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளேன்.

எலுமிச்சை அதிகமான வறட்சியைத் தாங்காது. தண்ணீர் தேங்கும் நிலங்களிலும் வளராது. பொதுவாக எலுமிச்சை நடவு செய்தால் காய்ப்புக்கு வர 5 ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு இரு பருவங்களில் மட்டுமே எலுமிச்சை அதிகமாகக் காய்க்கும்; மற்ற காலங்களில் மகசூல் கிடைக்காது. பருவ காலத்திலும்கூட எல்லா எலுமிச்சை மரங்களும் அதிகமாகக் காய்ப்பதில்லை. சில மரங்களில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் காய்க்கும். இதனால் வறட்சியைத் தாங்கி, ஆண்டின் எல்லாக் காலங்களிலும் மகசூல் அளிக்கும் எலுமிச்சையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in