அரியலூரில் விளைந்த மலைக் காய்கறிகள்: புதுமை படைத்த விவசாயி

வண்ணம்புத்தூர் கிராமத்தில் சீனிவாசன் வயலில் விளைந்துள்ள முட்டைக்கோஸ் பயிர்கள்.(உள்படம்) காலிபிளவருடன் சீனிவாசன்.

வண்ணம்புத்தூர் கிராமத்தில் சீனிவாசன் வயலில் விளைந்துள்ள முட்டைக்கோஸ் பயிர்கள்.(உள்படம்) காலிபிளவருடன் சீனிவாசன்.

Updated on
2 min read

முட்​டைகோஸ், காலிபிளவர், கேரட் ஆகிய காய்​கறி பயிர்​களை மலைப் பிரதேசங்​களில் மட்​டுமல்ல, அரியலூர் போன்ற சமவெளிப் பகு​தி​களி​லும் சாகுபடி செய்ய முடியும் என்று நிரூபித்​துள்​ளார் ஒரு விவசாயி. அரியலூர் மாவட்​டம் கீழப்​பழு​வூர் அடுத்த வண்​ணம்​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சீனி​வாசன் (45). விவசாயியான இவர், கடந்த சில ஆண்​டு​களாக விவ​சா​யத்​தில் புது​மை​யும், லாபம் தரும் பயிர்​களை​யும் பயி​ரிட்டு வரு​கிறார்.

அந்த வகை​யில் 6 ஆண்​டு​களுக்கு முன்பு தனது வயலில் கமலா ஆரஞ்​சு, சாத்​துக்​குடி பழங்​களை சாகுபடி செய்​தார். அவருக்கு நல்ல மகசூல் கிடைத்​தது. இந்​தப் பழப் பயிர்​களை அரியலூர் மாவட்​டத்​தி​லும் சாகுபடி செய்ய முடி​யும் என்​பதை நிரூபித்​துக் காட்​டி​னார்.

அதன் பின்​னர், தனது வயலில் அடர் வகை (நெருக்​க​மான) சாகுபடி மூலம் தைவான் கொய்யா ரகங்​களை கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்பு பயி​ரிட்டு பழங்​களை விற்​பனை செய்​தார். அதே​போல் தக்​காளி, முருங்​கை, முள்​ளங்கி என பல்​வேறு பயிர்​களை சாகுபடி செய்து வந்த சீனி​வாசன், கடந்த அக்​டோபர் மாதத்​தில் ஓசூரிலிருந்து முட்​டைக்​கோஸ் மற்​றும் காலிபிளவர் நாற்​றுகளை வாங்கி வந்து நடவு செய்​தார். தற்​போது அவை அறு​வடைக்​குத் தயா​ராக உள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in