விவசாயத்திலும் ஏஐ வந்து விட்ட​தா...!

விவசாயத்திலும் ஏஐ வந்து விட்ட​தா...!
Updated on
2 min read

விவசாயம் என்பது இனி வெறும் உழைப்பு சார்ந்த தொழில் மட்டுமல்ல; அது தரவுகள் சார்ந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் தொழிலாக மாறி வருகிறது. உலகெங்கும் பெருகி வரும் உணவுத் தேவையைச் சமாளிக்க, பாரம்பரிய விவசாய முறைகளுடன் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) கைகோர்த்துள்ளது. இது ஒரு புதிய ‘டிஜிட்டல் பசுமைப் புரட்சிக்கு’ வித்திட்டுள்ளது.

துல்​லிய வேளாண்​மை

ஏஐ-இன் மிகச்​சிறந்த பங்​களிப்பு துல்​லிய வேளாண்மை (Precision Farming) ஆகும். நிலத்​தடி​யில் பொருத்​தப்​படும் சென்​சார்​கள் மண்​ணின் ஈரப்​ப​தம், நைட்​ரஜன், பாஸ்​பரஸ் உள்​ளிட்ட பயிர்​களுக்​குத் தேவை​யான உரங்​களின் அளவு மற்​றும் வெப்​பநிலை​யைத் தொடர்ந்து கண்​காணிக்​கும். இந்​தத் தரவு​களை AI பகுப்​பாய்வு செய்​து, எந்​தப் பயிருக்​கு, எவ்​வளவு தண்​ணீர் மற்​றும் உரம் தேவை என்​ப​தைத் துல்​லிய​மாக விவ​சா​யி​யின் செல்​போன் எண்​ணுக்கே தகவல் அனுப்​பும். இதனால் தேவையற்ற உரச் செலவு 30% வரை குறை​கிறது.

பயிர் பாது​காப்பு மற்​றும் நோய் கண்​டறிதல்

பயிர்​களைத் தாக்​கும் பூச்​சிகள் மற்​றும் நோய்​கள் விவ​சா​யிகளுக்​குப் பெரும் நஷ்டத்தை ஏற்​படுத்​துகின்​றன. இப்​போது, ஏஐ தொழில்​நுட்​பம் கொண்ட செயலிகள் மூலம் பாதிக்​கப்​பட்ட பயிரை ஒரு புகைப்​படம் எடுத்தாலே போதும். அந்​தத் தொழில்​நுட்​பம் நொடிப்​பொழு​தில் நோயைக் கண்​டறிந்​து, அதற்​கான சரி​யான தீர்​வையும் பரிந்​துரைக்​கிறது. இது ஒட்​டுமொத்த நிலத்துக்கும்​பூச்​சிக்​கொல்லி தெளிப்​ப​தைத் தவிர்த்​து, பாதிக்​கப்​பட்ட இடத்​திற்கு மட்​டும் மருந்து தெளிக்க உதவு​கிறது.

வானிலை மற்​றும் சந்தை கணிப்​பு​கள்

ஏஐ கருவி​கள் கடந்த பல ஆண்​டு​கால வானிலை தரவு​களை ஆய்வு செய்​து, மழைப்​பொழிவு மற்​றும் புயல் குறித்த துல்​லிய​மான எச்​சரிக்​கைகளை வழங்​கு​கின்​றன. இதுவிவ​சா​யிகள் விதைப்பு மற்​றும் அறு​வடை நேரத்​தைத் திட்​ட​மிட உதவு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in