சாகுபடி பொருளாதாரத்தின் அடிப்படைக் காரணிகள்

சாகுபடி பொருளாதாரத்தின் அடிப்படைக் காரணிகள்
Updated on
2 min read

விவசாயம் என்பது வெறும் உணவு உற்பத்தியோடு முடிந்துவிடும் ஒரு செயலல்ல; அது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.

விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம், உழைப்பு மற்றும் மூலதனம் போன்ற வளங்களை எவ்வாறு மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். விவசாயப் பொருளாதார நுணுக்கங்களில் அதிக கவனம் செலுத்தும் விவசாயிகளே இன்றைய சூழலில் வெற்றி பெறுகிறார்கள்.

குறிப்பாக, சாகுபடி செலவு மேலாண்மையில் சிறந்து விளங்குவோருக்கு வெற்றி நிச்சயம் என்பதே பல முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பாடமாக உள்ளது.

உற்​பத்​தித் திறனைத் தீர்​மானிக்​கும் காரணிகள் விவசாய உற்பத்​தி​யைத் தீர்​மானிப்​ப​தில் நிலம், நீர், காலநிலை, மனித உழைப்பு, மூலதனம் மற்றும் நிர்​வாகம் ஆகிய காரணிகளே மிக முக்​கியப் பங்கு வகிக்​கின்றன.

இவை இன்றி விவசாயம் சாத்​தி​யமில்லை. இதில் மனித உழைப்பு என்பது திட்​ட​மிடல் முதல் அறுவடை வரை செய்​யப்​படும் அனைத்து உடல் ரீதியான பணிகளை​யும் உள்ளடக்​கியது. அதேபோல, மூலதனம் என்பது இடுபொருட்​கள், சாகுபடி இயந்​திரங்கள் மற்றும் பணிகளுக்​காகச் செய்​யப்​படும் செலவு​களைக் குறிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in