மண்ணுக்கு உணவு அல்லது பயிருக்கு உரம் எது முக்கியம்?

மண்ணுக்கு உணவு அல்லது பயிருக்கு உரம் எது முக்கியம்?
Updated on
2 min read

ஒரு செடி செழித்து வளர்வதற்கு நாம் அளிக்கும் வெளிப்புற உரங்களை விட, அந்தச் செடி வளரும் மண்ணின் உள்ளார்ந்த ஆரோக்கியமே மிக முக்கியமானது. இதனைப் பல விவசாயிகள் அறியாமல் உரங்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆரோக்கியமான மண் என்பது செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.

வேர்கள் சுவாசிக்கத் தேவையான காற்று இடைவெளிகளையும், நீரைச் சரியாகத் தேக்கி வைத்து செடிகளுக்குக் கடத்தும் சமநிலையையும் வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மண்ணில் வாழும் கோடிக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களே செடியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் உண்மையான சக்திகளாகும்.

நாம் செடிகளுக்குத் தரும் உரங்கள் உடனடி மற்றும் குறுகிய கால பலனைத் தந்தாலும், மண் வளத்தைப் பாதுகாப்பது மட்டுமே விவசாயத்தில் நீண்ட கால மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, ரசாயன உரங்களைச் சார்ந்து இருப்பதை விட, மண்ணின் உயிரோட்டத்தைப் புரிந்துகொண்டு, அந்த மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதே முதன்மையான கடமையாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in