குடும்ப ஆரோக்கியம் முதல் வணிகச் சாதனை வரை: நுண்கீரைகள் வளர்ப்பில் சாதிக்கும் பட்டதாரிப் பெண்

வளர்ந்து வரும் நுண்கீரைகள். (உள்படம்) காயத்ரி

வளர்ந்து வரும் நுண்கீரைகள். (உள்படம்) காயத்ரி

Updated on
2 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் காயத்ரி, இன்று நுண்கீரைகள் (Microgreens) வளர்ப்பிலும் விற்பனையிலும் சாதித்து வருகிறார்.

இவருடைய கணவர் ராஜபிரபு மும்பையிலுள்ள முன்னணித் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஒரு மகனும் மகளும் என நிறைவான குடும்பச் சூழலில் வாழும் காயத்ரி, தனக்குள் இருந்த தொழில்முனைவோர் திறமையால் இந்த நிலையை எட்டியுள்ளார்.

இல்​லத்​தில் தொடங்கிய பசுமைப் புரட்சி

முற்றி​லும் இயற்​கையான முறை​யில், தனது இல்லத்​திலேயே சிறிய குடில் (Shed) அமைத்து, பிரத்​யேகத் தட்டு​களில் (Trays) காயத்ரி இந்த நுண்​கீரைகளை வளர்த்து வருகிறார்.

புரத​மும் வைட்​ட​மின் ஈ சத்தும் நிறைந்த சூரிய​காந்தி, உடல் எடையைக் குறைத்து கொலஸ்ட்​ராலைக் கட்டுக்​குள் வைக்​கும் கொள்ளு, குழந்தை​களின் செரி​மானத்தை மேம்​படுத்தி உடலுக்​குக் குளிர்ச்சி தரும் பச்சைப்​பயறு எனப் பலதரப்​பட்ட கீரைகளை அவர் உற்பத்தி செய்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in