நெல் விளைச்சலில் ஹெக்டேருக்கு 14 ஆயிரத்து 925 கிலோ மகசூல்: சாதித்தது எப்படி என விவரிக்கிறார் விவசாயி வீரமணி

நெல் விளைச்சலில் ஹெக்டேருக்கு 14 ஆயிரத்து 925 கிலோ மகசூல்: சாதித்தது எப்படி என விவரிக்கிறார் விவசாயி வீரமணி
Updated on
3 min read

தமிழ்​நாடு வேளாண்​மைத் துறை நடத்​திய பயிர் விளைச்​சல் போட்​டி​யில், 2025ஆம் ஆண்டு அதிக நெல் உற்​பத்தி செய்​ததற்​கான ‘சி.​நா​ராயண​சாமி நாயுடு நெல் உற்​பத்தி திறனுக்​கான விருது’, தஞ்​சாவூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த க.வீரமணி என்ற விவ​சா​யிக்கு கிடைத்​துள்​ளது. பூதலூர் அரு​கே​யுள்ள விண்​ணமங்​கலத்​தைச் சேர்ந்த இவருக்​கு, தீட்​சச​முத்​திரம் கிராமத்​தில் 7 ஏக்​கர் நிலம் உள்​ளது. கடந்​தாண்டு சம்பா சாகுபடி பரு​வத்​தில் ஹெக்​டேருக்கு 14 ஆயிரத்து 925 கிலோ மகசூல் கிடைத்​துள்​ளது.

இதன் மூலம், நெல் விளைச்​சலில் மாநிலத்​தில் முதலிடம் பெற்​றிருக்​கிறார். இந்த சாதனைக்​காக, அண்​மை​யில் நடை​பெற்ற குடியரசுத் தின விழா​வின் போது முதலமைச்​சர் மு.க.ஸ்​டா​லின் இவருக்கு ரூ.5 லட்​சம் ரொக்​கப் பரிசுடன் கூடிய விருதை வழங்கி கவுர​வித்​தார். இது பற்றி கேள்​விப்​படும் விவ​சா​யிகள் அனை​வருக்​கும் வியப்பு ஏற்​படு​வதுடன், இந்த அளவுக்கு மகசூல் கிடைப்​பது சாத்​தி​யமா என்ற கேள்​வி​யும் இயல்​பாகவே எழுகிறது.

இது பற்றி விவ​சாயி வீரமணி​யிடம் கேட்​ட​போது, “கடந்த ஆண்டு சம்பா பரு​வத்​தில் நான் நிகழ்த்​திய சாதனைக்​காக இந்த விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு ஒரு பயி​ரில் இருந்து சராசரி​யாக 60 முதல் 80 தூர்​கள் வரை வளர்ந்​திருந்​தன. இந்த ஆண்டு அதை​விட​வும் அதி​க​மாக 120 தூர்​கள் வரை உள்​ளன. இன்​னும் சுமார் 25 நாட்​களில் அறு​வடை ஆகி​விடும். அதற்கு முன்பு யார் வேண்​டு​மா​னாலும் எனது வயலுக்கு நேரில் வந்து எனது நெல் சாகுபடி​யின் வெற்றி பற்றி உறுதி செய்து கொள்​ளலாம்” என்​கிறார்.

“உங்​களை வெற்​றி​பெறச் செய்த சாகுபடி தொழில்​நுட்​பங்​கள் என்​னென்​ன?” என்ற கேள்விக்கு அவர் விளக்​கமளித்​தார். எங்​கள் வயலில் இரண்டு போகம் மட்​டும் நெல் சாகுபடி செய்​கிறோம். சித்​திரை முதல் வாரம் தொடங்​கி, ஆடி மாதம் இறுதி வரையி​லான கால​கட்​டத்​தில் முன் குறுவை சாகுபடி செய்​கிறோம். ஆவணி, புரட்​டாசி மாதங்​களில் 60 நாட்​கள் நெல் சாகுபடி செய்​வ​தில்​லை.

இந்த கால​கட்​டத்​தில் செம்​மறி ஆட்டு கிடை வயலில் அடைப்​போம். தக்​கைப்​பூண்டு உள்​ளிட்ட பசுந்​தாள் உரங்​களை மட்​டும் பயி​ரிட்​டு, 45வது நாளில் மடக்கி உழுது விடு​வோம். அதன் பின்​னர் ஐப்​பசி மாதம் விதை விட்​டு, மாசி மாதம் அறு​வடை வரு​மாறு கணக்​கிட்டு சாகுபடி செய்​கிறோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in