

விருதுநகர் அருகே அழகாபுரியில் மல்பெரி தோட்டத்தில் ரமேஷ்.
விருதுநகர் பகுதியில் முதன்முறையாக பட்டுப்புழு வளர்த்தது மட்டுமல்லாமல், அதில் நல்ல வருமானம் பெற்று சாதனை படைத்துள்ளார் விவசாயி ரமேஷ் (46). விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் ரமேஷ். கொய்யா சாகுபடியில் மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தற்போது பட்டுப்புழு வளர்க்கும் ஆர்வத்தில் மல்பெரி சாகுபடியை விருதுநகர் பகுதியில் முதன்முறையாகத் தொடங்கினார். இதில் நல்ல மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது: தாத்தா, அப்பா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கொய்யா சாகுபடி செய்து வந்தோம்.