நோனி பழம் உற்​பத்​தி​யில் அசத்​தும் பொள்​ளாச்சி விவ​சாயி

 தனது தோட்​டத்​தில்​ விளைந்​த நோனி பழங்​களுடன்​ மணிகண்டன்

தனது தோட்​டத்​தில்​ விளைந்​த நோனி பழங்​களுடன்​ மணிகண்டன்

Updated on
2 min read

கோவை மாவட்​டம் பொள்​ளாச்சி அருகே நல்​லாம்​பள்ளி கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி மணி​கண்​டன் (47). இவர் தனக்கு சொந்​த​மான 8 ஏக்​கர் நிலத்​தில், ஒன்​றரை ஏக்​கரில் மாற்று விவ​சாய​மாக நுணா எனப்​படும் நோனி சாகுபடி செய்து வரு​கிறார். நோனி பழத்​திலிருந்து பழச்​சாறு தயாரித்து விற்​பனை செய்​கிறார்.

தமிழகத்​தின் பூர்​வீக மரமான மஞ்​சனத்தி வகை​யைச் சார்ந்​தது வெண் நுணா என்​னும் நோனி மரம். ஆஸ்​திரேலி​யா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்​பைன்​ஸ், ஹவாய் போன்ற நாடு​களில் அதி​கம் உற்​பத்தி செய்​யப்​படும் நோனி பழங்​களின் பழச்​சாறுக்கு அமெரிக்​கா, ஐரோப்பா நாடு​களில் கிராக்கி அதி​கம். மருத்​துவ குணம் நிறைந்த நோனி பழங்​களை கடந்த 10 ஆண்​டு​களாக உற்​பத்தி செய்து வரும் மணி​கண்​டன், தனது அனுபவங்​களைப் பகிர்ந்து கொண்​டார்.

இந்​திய மல்​பெரி பழம் என அழைக்​கப்​படும் நோனி பழத்​தில் பல்​வேறு ஊட்​டச்​சத்​துக்​கள் நிறைந்​துள்​ளன. நோனி பழச்​சாற்றை அதன் இயற்கை தன்​மை​யும், சுவை​யும் மாறாமல் தயாரித்து விற்​பனை செய்​கிறோம். உலக அளவில் பிரசித்தி பெற்ற நோனி பழம் பற்றி இப்​போது​தான் தமிழக மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in