நஞ்சில்லா உணவு: கரூரில் ஒரு முன்னோடி விவசாயி

தன்னுடைய நெல் வயலில் சங்கரநாராயணன்

தன்னுடைய நெல் வயலில் சங்கரநாராயணன்

Updated on
2 min read

ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண்ணின் வளம் குன்றி வரும் இன்றைய சூழலில், ‘பல்லுயிர் பாதுகாப்பு’ எனும் இயற்கை கோட்பாட்டை முன்னிறுத்தி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.

நங்கவரத்தைச் சேர்ந்த 53 வயதான பி. சங்கரநாராயணன், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் துறையில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் ரசாயன விவசாயம் செய்து வந்த இவர், மண்ணின் ஆரோக்கியம் கருதி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்வதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

பாரம்பரிய ரகங்களின் சங்கமம்

இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தால், தொடக்கத்தில் ஒரு சிறிய சோதனையாகத் தொடங்கிய இவரது முயற்சி இன்று ஒரு பெரும் இயக்கமாக மாறியுள்ளது. தனது மொத்தமுள்ள 30 ஏக்கர் நிலத்தில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டு சாதனை படைத்து வருகிறார்.

இவரது பசுமை வயல்களில் மருத்துவக் குணங்கள் நிறைந்த சிவன் சம்பா, ரசகடம், இலுப்பைப்பூ சம்பா, ரத்த சாலி மற்றும் மேம்படுத்தப்பட்ட கருப்பு கவுனி போன்ற அரிய ரகங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in