

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025-26 ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.