கோவையில் மாற்றுப் பயிராகக் கோலோச்சும் டிராகன் பழச் சாகுபடி

கோவை அருகே தீத்திபாளையத்தில் வளர்ந்துள்ள டிராகன் பழச்சாகுபடி. படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை அருகே தீத்திபாளையத்தில் வளர்ந்துள்ள டிராகன் பழச்சாகுபடி. படங்கள்: ஜெ.மனோகரன்.

Updated on: 
2 min read

மேற்​குத் தொடர்ச்சி மலை​யடி​வாரக் கிராமங்​களில் ஒன்​றான கோவை அருகே உள்ள தீத்​தி​பாளை​யத்​தில், தனது தோட்​டத்​தில் கடந்த 7 ஆண்​டு​களாக டிராகன் செடித்​தண்டை நட்டு வளர்த்து அறு​வடை செய்து வரு​கிறார் 73 வயதான விவ​சாயி டி.ஆர். பொன்​னு​சாமி.

சிறு விவ​சா​யிகள் வைத்​துள்ள 20 சென்ட் போன்ற சிறிய நிலப்​பரப்​பிலும் கூட, மெக்​சிகோ​வில் இருந்து இறக்​கும​தி​யான சத்து நிறைந்த இந்தப் பழத்​தைப் பயி​ரிட்​டுச் சோதித்​தும், சாதித்​தும் வரு​கிறார் பொன்​னு​சாமி.

குறைந்த நீரும் எளிய பராமரிப்​பும் போது​மானது என்​ப​தால், கோவை மாவட்​டத்​தின் 12 வட்​டாரங்​களி​லும் விவ​சா​யிகளிடம் ஒரு மாற்​றுப் பயி​ராக டிராகன் பழச் சாகுபடி உரு​வெடுத்து வரு​கிறது.

கள்ளி வகை​யைச் சேர்ந்த இந்​தப் பயிர், வறண்ட மற்​றும் மானா​வாரிப் பகு​தி​களில் நன்கு வளரும். வாழைச் சாகுபடிக்​குத் தேவைப்​படும் தண்​ணீரில் சுமார் 20 சதவீதம் மட்​டுமே இதற்​குப் போது​மானது. இருப்​பினும் களிமண் நிலம், தேங்கி நிற்​கும் நீர் அதிக மழைப்​பொழிவு ஆகியவை இதற்கு ஏற்​றவை அல்ல.

இச்​செடிகளுக்கு சிமெண்ட் அல்​லது கல் தூண்​கள், பந்​தல் போன்ற தாங்கி வளரத் தேவை​யான கட்​டமைப்​பு​கள் தேவைப்​படு​வ​தால், ஆரம்​பக்​கட்​டப் பராமரிப்​புச் செலவு அதி​க​மாக இருக்​கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in