காணாமல் போன காலாபாத் நெல் மீட்டெடுத்த திண்டுக்கல் விவசாயி: அரிசி கிலோ ரூ.200க்கு விற்பனை

காலா​பாத் நெல் வயல். (உள்படம்) ரசூல் முகைதீன்.

காலா​பாத் நெல் வயல். (உள்படம்) ரசூல் முகைதீன்.

Updated on
2 min read

சாகுபடி​யில் அரி​தாகிப்​போன, மணம் மிகுந்த பாரம்​பரிய ‘காலா​பாத்’ நெல் ரகத்​தைத் தேடி, மீட்​டெடுத்​து, சாகுபடி செய்து வரு​கிறார் திண்​டுக்​கல் மாவட்​டம் சித்​தையன்​கோட்​டையைச் சேர்ந்த விவ​சாயி அ.ரசூல் முகை​தீன்.

ஒரு காலத்​தில் தமிழகத்​தின் பல பகு​தி​களில் சாகுபடி செய்​யப்​பட்​டு, பின்​னாளில் வழக்​கொழிந்து போன பல நெல் ரகங்​களில் காலா​பாத்​தும் ஒன்​று. இந்த நெல் விளைந்து நிற்​கும் வயல் வரப்​பில், அறு​வடைக்​குச் சில நாட்​களுக்கு முன்பு நடந்து சென்​றாலே, அதன் நறுமணம் நாசி​யைத் துளைக்​கும்.

சமைக்​கும்​போது இதன் இயற்கை மணம் வீடு முழு​வதும் பரவி பசி​யைத் தூண்​டும். திண்​டுக்​கல் என்​றாலே அனை​வருக்​கும் பிரி​யாணி நினை​வுக்கு வரும். அந்​தப்பிரி​யாணிக்கு முதன்​முதலில் பயன்​படுத்​தப்​பட்​டது இந்த காலா​பாத் அரிசிதான் என்​பது பலரும் அறி​யாத உண்​மை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in