மதுரை மாவட்டத்தில் பேரீச்சை சாகுபடி

மதுரை மாவட்டத்தில் பேரீச்சை சாகுபடி
Updated on: 
2 min read

“விவசாயம்னாலே நஷ்டம்தான்” என்ற பொதுவான பிம்பத்தை உடைத்தெறிந்து, மதுரை மண்ணில் முதல்முறையாகப் பேரீச்சை சாகுபடி செய்து மாபெரும் சாதனை படைத்து வருகிறார் சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த விவசாயி மு.மூவேந்திரன்.

மிகக் குறைந்த பராமரிப்பில், ஆண்டுதோறும் பல லட்சங்களை வருமானமாக அள்ளி அசத்தி வரும் இவர், தனது 50-வது வயதில் மற்ற விவசாயிகளுக்கெல்லாம் மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

வெப்பமண்டலப் பயிரான பேரீச்சை, பொதுவாக ஈராக், ஈரான், சவூதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற அரபு நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மதுரையிலும் இதன் வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியுள்ளது.

பேரீச்சையில் அஜ்வா, எலைட், ஷம்ரன், மெட்ஜூல், ஜாகிடி, ஹலாவி, கத்ராவி, கலாஷ் எனப் பல ரகங்கள் இருந்தாலும், தமிழகத்தின் வானிலைக்கு ‘பர்ஹி’ ரகமே மிகவும் ஏற்றதாக உள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in