

தன் விவசாய நிலத்தில் மனைவி சுப்ரியாவுடன் முனிவேல்.
நீர்ப்பாசனம் இல்லாத பகுதியில், புதிய பாசன வசதியை ஏற்படுத்தி, இயற்கை விவசாயத்தில் காய்கறி சாகுபடி செய்து, மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் எம். முனிவேல்.
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பெருமாள்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். இயற்கை விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக முழுநேர விவசாயியாக மாறினார்.
தனது இயற்கை விவசாயப் பயணம் குறித்து முனிவேல் கூறியதாவது: தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பகுதி நேரமாக நெல் சாகுபடி செய்தேன்.