

அழியும் தருவாயில் உள்ள பாரம்பரிய நாட்டு வாழை ரகம் சாகுபடி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறார் குமரி மாவட்ட விவசாயி. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த மாத்தாரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மிக்கேல் (56).
இவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் பசுஞ்சாணம், ஆட்டுக் கழிவு உட்பட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தி, வாழை விவசாயம் செய்து வருகிறார்.