வைக்கோல் குறைந்ததன் விளைவு | நம்மாழ்வார் சொன்னது

வைக்கோல் குறைந்ததன் விளைவு | நம்மாழ்வார் சொன்னது
Updated on
1 min read

நெல் பயிரிட்ட வயல்களில் மனிதர்களுக்கு அரிசியும், மாடுகளுக்கு வைக்கோலும் கிடைத்தன. வைக்கோலை சாப்பிட்ட மாடுகள் நமக்கு பாலைத் தந்தன. எருதுகள் ஏரோட்டவும், வண்டியிழுக்கவும், தண்ணீர் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், இந்த மாடுகள் மூலம் கிடைத்த சாணம், வயலை வளமூட்ட கிடைத்த நல்ல இயற்கை உரம் ஆகும். ஆனால், இன்றைய நம் விவசாய முறை நெல்லை உற்பத்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் வைக்கோல்கள் பற்றி அக்கறை காட்டுவதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in