

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பதே நஷ்டத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விவசாயம் என்பது முற்றிலும் செயற்கை உரங்கள், பூச்சி மருந்து என்று ரசாயனம் மிகுந்ததாக மாறிவிட்டது.
இதன் காரணமாக வயலில் இருக்கும் மண்ணும் நச்சுத்தன்மையுடன் காணப்படுகிறது. அதனால் அதில் விளைவிக்கும் தானியங்களும் நச்சுத்தன்மையோடு விளைகின்றன. இதை உண்ணும் மனிதர்களுக்கு ஏராளமான நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.
இதை மாற்றி நல்ல ஆரோக்கியமான உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏராளமான விவசாயிகள் அழிந்து போன பாரம்பரிய ரகங்களை திரும்ப மறு உற்பத்தி செய்து ரசாயனங்கள் கலக்காமல் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். அதுவும் இன்றைய காலகட்டத்தில் செலவு மிகுந்ததாக ஆகி வருகிறது.