

வானம் பார்த்த கரிசல் காட்டில் யாரும் விதைக்காமல் தானாக விளைந்து அறுவடை செய்யப்படுகிறது அதலைக் காய். காட்டுப் பகுதிகளிலும், வரப்பு ஓரங்களிலும் தானாக வளர்ந்து கிடக்கும் அதலைக் கொடிகளை விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் காண முடியும்.
குறிப்பாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. கொடியாக படர்ந்திருக்கும் அதலை, பாகற்காயுடன் மரபு வழித் தொடர்பு கொண்டவை.