கைப்​பேசிக்​குள் வந்த வேளாண்மை

கைப்​பேசிக்​குள் வந்த வேளாண்மை
Updated on: 
2 min read

ஒரு காலத்​தில் விவசாயி வயலுக்​குச் செல்​லும்​போது கையில் மண்​வெட்டி, தோளில் துண்டு, சட்​டைப்​பையில் சில விதைகள் இருந்​திருக்​கலாம். இன்று அவருடன் இன்​னொரு சிறிய கரு​வியும் இருக்​கிறது.

அது​தான் கைப்​பேசி. கைப்​பேசி வயலை உழாது; விதையை விதைக்​காது; மழையைப் பெய்​ய​ வைக்​காது; பயிரை அறு​வடை செய்​யாது. ஆனால் சரியான நேரத்​தில் சரியான முடிவெடுக்க அது விவசாயிக்கு உதவும்; வேளாண் அறிவை விரைவாகத் தரும்; சந்​தைத் தகவல்​களை அரு​கில் கொண்டு சேர்க்​கும்; வானிலை நில​வரத்தை முன்​கூட்​டியே சொல்​லும்; நிபுணர்​களைத் தொடர்​புபடுத்​தும்.

அத​னால் கைப்​பேசி, விவசாயி​யின் அறி​வின் நீட்​சி​யாக மாறியுள்​ளது. மழையை ஊகிக்க விவசாயி வானத்​தைப் பார்த்த காலம் இன்​னும் முடிவடைய​வில்லை. மேகத்​தின் நிறம், காற்​றின் திசை, ஈரப்​ப​தம், பறவை​களின் நடத்தை என இவற்​றையெல்​லாம் பார்த்து விவசாயியால் சரியான முடிவு​களை எடுக்க முடி​கிறது.

வானத்​தைப் பார்க்​கும் விவசாயி, இன்று வானிலை கணிப்பு தொடர்​பான தகவல்​களை அறிய கைப்​பேசி​யையும் பார்க்​கிறார். வானிலை தகவல்​கள் சரியான நேரத்​தில் கிடைத்​தால் பாசனம், மருந்து தெளிப்பு, அறு​வடை போன்​றவற்றை அவர் சிறப்​பாகத் திட்​ட​மிடலாம். ஆக, நேற்று வானம் மட்​டும் சொன்ன செய்​தியை விவசாயிக்கு இன்று கைப்​பேசி திரை​யும் சொல்​கிறது.

சந்தை விலை சட்​டைப்​பைக்​குள்

ஒரு காலத்​தில் சந்தை விலை அறிய விவசாயி அரு​கிலுள்ள சந்​தைக்கே செல்ல வேண்​டி​யிருந்​தது. இன்று பல சந்​தைகளின் விலைத் தகவல்​கள் கைப்​பேசி​யில் கிடைக்​கின்​றன.

எங்கே விலை அதி​கம்? எந்​தப் பொருளுக்​குத் தேவை உள்​ளது? இன்று விற்​பது நல்​லதா அல்​லது காத்​திருக்​கலாமா? போன்ற பல முடிவு​களை எடுக்க கைப்​பேசித் தகவல்​கள் உதவு​கின்​றன. சந்​தைக்​குச் செல்​லும் முன்பே விலை தெரிந்​தால், விவசாயி​யின் பேரம் பேசும் வலிமையும் அதி​கரிக்​கும்.

Loading content, please wait...

X