Published : 30 Oct 2017 11:06 AM
Last Updated : 30 Oct 2017 11:06 AM

வெற்றிமொழி: ஹருகி முரகாமி

1949-ம் ஆண்டு பிறந்த ஹருகி முரகாமி ஜப்பானிய எழுத்தாளர். சிறுவயதிலேயே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறனுடையவர். இவரது புத்தகங்கள் ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் விற்பனையில் சிறந்து விளங்குகின்றன. மேலும், இவரது சிறந்த படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன. ஜப்பான் மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்கால நவீன இலக்கியத்தில் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.

# எல்லோரும் படிக்கின்ற புத்தகங்களை மட்டுமே நீங்கள் படித்தால், எல்லோரும் எதை சிந்திப்பார்களோ அதை மட்டுமே உங்களால் சிந்திக்க முடியும்.

# வலி தவிர்க்கமுடியாதது. துன்பமடைவது தவிர்க்கக்கூடியது.

# இழந்த வாய்ப்புகள், இழந்த சாத்தியக்கூறுகள் மற்றும் இழந்த உணர்வுகள் ஆகியவற்றை நம்மால் திரும்பப்பெற முடியாது.

# கேளுங்கள் - அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர் என்று எதுவுமில்லை.

# மரணம் என்பது வாழ்க்கைக்கு எதிர்மறையானது அல்ல, அது வாழ்க்கையின் ஒரு பகுதி.

# பைத்தியக்காரத்தனமான விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்வது நேரத்தை வீணடிக்கும் செயல்.

# உங்கள் கண்களை மூடிக்கொள்வதால் எதுவும் மாறப்போவதில்லை.

# மிக முக்கியமான விஷயங்களை பள்ளியில் கற்றுக்கொள்ள முடியாது என்பதே பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம்.

# பணத்தால் வாங்க முடிந்த விஷயங்களில் உங்கள் பணத்தை செலவிடுங்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

# உங்களால் நினைவுகளை மறைக்க முடியும், ஆனால் அவற்றை உருவாக்கிய வரலாற்றை உங்களால் அழிக்கமுடியாது.

# கனவுகள் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது – நீங்கள்தான் கனவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

# ஒவ்வொரு மனிதனும் தனது தனிப்பட்ட வழியில் துன்பத்தை உணர்கிறான், ஒவ்வொருவரும் தங்களுக்கான சொந்த வடுக்களை கொண்டுள்ளனர்.

# வாழ்க்கையில் சில விஷயங்கள் எந்த மொழியிலும் விவரிக்க மிகவும் சிக்கலானவை.

# நீங்கள் உண்மையில் எதையாவது தெரிந்துகொள்ள விரும்பினால், அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x