Published : 23 Oct 2017 11:25 AM
Last Updated : 23 Oct 2017 11:25 AM

சென்னை ஐடிஐ-களுக்கு 6 யமஹா இன்ஜின் நன்கொடை

ருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் திகழும் யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், மாணவர்கள் தொழில் பழகுவதற்கு ஏதுவாக 6 இன்ஜின்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனத்தின் துணை நிறுவனமான யஹமா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சென்னையைச் சுற்றி அமைந்துள்ள தொழில் பயிற்சி (ஐடிஐ) கல்லூரிகளுக்கு 6 இன்ஜின்களை அளித்துள்ளது.

ஐடிஐ-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயிலும் மாணவர்கள் நேர்முக பயிற்சி பெற இத்தகைய இன்ஜின்கள் உதவும்.

கடந்த மாதம் இதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சுற்றியுள்ள 6 ஐடிஐ-களுக்கு இதேபோன்று 6 இன்ஜின்களை இந்நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்த ஒரகடம் தொழிற்பேட்டையில் யமஹா இருசக்கர வாகன உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி அதாவது செங்கல்பட்டு, கிண்டி, அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஐடிஐ-களுக்கு இன்ஜின்கள் வழங்கப்பட்டன.

இந்நிறுவனத் தயாரிப்பான எஃப் இஸட் மோட்டார் சைக்கிள், ரே ஸ்கூட்டர் ஆகியவற்றின் இன்ஜின்கள் அளிக்கப்பட்டன. கிண்டி ஐடிஐ, செங்கல்பட்டு ஐடிஐ, அம்பத்தூர் ஐடிஐ ஆகியவற்றுக்கு தலா 2 இன்ஜின்கள் வீதம் வழங்கப்பட்டன.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு மக்களின் திறன் மற்றும் அறிவாற்றல் ஆகியன பெரும் பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய காரணியாகும் என்று இன்ஜின்களை கல்லூரி முதல்வர்களிடம் அளிக்கும் விழாவில் பேசும்போது யமஹா நிறுவன நிர்வாக இயக்குநர் யாசோ இஷிஹரா குறிப்பிட்டார்.

தொழில் பயிற்சி கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு திறன் குறைவாக உள்ளது என்பதே தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது. யமஹாவின் இத்தகைய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயம் மாணவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x