

கேள்வி கேட்டுப் பழகு, சக. முத்துக்கண்ணன்,
ச. முத்துக்குமாரி, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924
நம் குழந்தைகளைக் கேள்வி கேட்கப் பழக்கு கிறோமா? முதலில் பெற்றோரோ ஆசிரியரோ குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்குவிப்பதில்லை. ஆனால், குழந்தைமை என்பது கேள்விகள் நிறைந்தது. கேள்வி என்பது அறிவுக்கான தேடல்தான். காரண, காரியம் இருக்கும் எந்த ஒன்று சார்ந்தும் கேள்வி பிறக்காது.
அப்படியே கேள்வி வந்தாலும் காரணத்தை எளிதாக விளக்கிவிடலாம். இப்படிக் குழந்தைகள் கேள்வி எழுப்பும்போது மூடநம்பிக்கைகள் சார்ந்தும் பல கேள்விகள் வரும், அவற்றுக்கு விடை தேட முயல்வதே பெரியவர்களுக்கு அழகு. இதுபோல் குழந்தைகளுக்குத் தோன்றும் கேள்விகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்பதன் அவசியத்தைப் பல்வேறு செயல்பாடுகள் வழியே இந்த நூல் வலியுறுத்துகிறது.