

தினை விளையும் தினைப் புனத்துக்கு வரும் கிளி உள்ளிட்ட பறவைகளை விரட்டும் தலைவியும் தோழியும் குறித்து குறிஞ்சிப் பாட்டில் குறிப்பு உள்ளது. அதே போல் மகாகவி காளிதாசரின் உலக புகழ்பெற்ற படைப்பான ‘சாகுந்தலம்’ காவியத்தில் தினையின் பெருமைகளை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் தேனும் தினைமாவும் சேர்த்துச் சாப்பிடப்பட்டது தொடர்பான குறிப்பு உள்ளது.
இப்படிப் பண்டைய காலந்தொட்டே தினை பயிரிடப்பட்டுவருகிறது; முதன்மை உணவாகவும் இருந்து வருகிறது. தினை சுவை மிக்கது. ஊட்டச்சத்துகள் அதில் நிரம்பி உள்ளன. இது எளிதில் செரிக்கக் கூடியது மட்டுமல்லாமல்; ஒவ்வாமையை ஏற்படுத்தாதது.
சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண் களுக்கும் ஏற்ற உணவான தினையில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. புரதம், வைட்டமின்கள், செம்பு, இரும்பு போன்ற சத்துகளும் தினையில் உள்ளன.
வயிற்றுப் பிரச்சினைகள், உடல் பருமன், மலச் சிக்கல், கீல்வாதம், காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்குத் தினை ஓர் அருமருந்து. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கொழுப்பையும் குறைப்பதற்குத் தினை உதவும். முக்கியமாக, சர்க்கரை நோய்க்கும், இரைப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் திறனைக் கொண்டதாகத் தினை இருக்கிறது. தினையைப் பயன்படுத்தி இனிப்பு, பொங்கல், தோசை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
நன்றி: பாதுகாப்புக்கான உணவிற்கான கூட்டமைப்ப