

இந்தியாவின் ஏற்றுமதி 2022-23 நிதி ஆண்டில் 6% அதிகரித்து இருக்கிறது. 447 பில்லியன் டாலர் மதிப்பில் (ரூ. 36.65லட்சம் கோடி) இந்தியாவிலிருந்து சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இது ஏற்றுமதியில் இந்தியா தொட்டிருக்கும் புதிய உச்சம்.
அதேசமயம், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி 16.5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 714 பில்லியன் டாலர் மதிப்பில் (ரூ.58.54 லட்சம் கோடி) வெளிநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.