Published : 11 Sep 2017 11:09 AM
Last Updated : 11 Sep 2017 11:09 AM

வெற்றிமொழி: ஃபில் மெக்ரா

1950 ஆம் ஆண்டு பிறந்த பில் மெக்ரா அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரமுகர், உளவியலாளர் மற்றும் எழுத்தாளர். உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவரால் நடத்தப்படும் டாக்டர் பில் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறியப்படுபவர். விற்பனையில் சிறந்து விளங்கும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிகம் சம்பாதிக்கும் உலக பிரபலங்களில் இவரும் ஒருவர். குழந்தைப்பருவ உடல் பருமனுக்கு எதிராகப் போராடுவதற்கான நிதி திரட்ட டாக்டர் ஃபில் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

சில நேரங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும், சில நேரங்களில் நீங்கள் முடிவை சரியானதாக ஆக்கவேண்டும்.

மற்றவருடன் பிணியுடன் இருப்பதைவிட தனியாக ஆரோக்கியமாக இருப்பதே சிறந்தது.

நீங்கள் உங்களுக்காக இல்லை என்றால் மட்டுமே, நீங்கள் தனிமையாக இருக்கிறீர்கள்.

நாம் அனைவருக்கும் ஒரு சமூக முகமூடி உள்ளது, இல்லையா?

ஒரு கண்ணாடி இல்லாமல் உங்கள் சொந்த முகத்தைப் பார்ப்பது கடினமான ஒன்று.

அனைத்து தேர்வுகளிலும் 80 சதவீதம் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டவை.

நடவடிக்கை இல்லாத விழிப்புணர்வு பயனற்றது.

ஒவ்வொருவரும் தங்களது துன்பங்களுக்கான அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கான சவாலை எதிர்கொள்கிறார்கள்.

ஒருவருடைய சொற்கள் உங்களை வருத்தமடையச்செய்ய நீங்கள் அனுமதிக்கும்போது, நீங்கள் உங்களது ஆற்றலை இழக்கிறீர்கள்.

காயம், பயம் மற்றும் விரக்தியின் வெளிப்புற வெளிப்பாடே கோபம்.

பெரும்பாலான மக்கள் தாங்கள் விரும்புவதை தேர்ந்தெடுப்பதில்லை; அவர்கள் எதை பாதுகாப்பானதாக நினைக்கிறார்களோ அதையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

நீங்கள் ஒரு நாய் மீது இறகுகளை வைத்து, அதை ஒரு கோழி என்று அழைக்க முடியாது.

சில நேரங்களில் நீங்கள் வெற்றிபெறுகிறீர்கள், சில நேரங்களில் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x