

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து மாற்று எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உலகம் உள்ளது. இதனால், மின்வாகனங்களை நோக்கி உலக நாடுகள் தீவிரமாக நகர்ந்து வருகின்றன. சமீபமாக மின்வாகன விற்பனை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தருணத்தில்உலக அளவில் மின்வாகன சந்தை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.