Published : 19 Feb 2023 01:07 PM
Last Updated : 19 Feb 2023 01:07 PM
இருபதாண்டுகட்கு முன்னால் நிலைமை இப்படி இருக்கவில்லை. தமிழறிஞர் பெருமக்களின் முகங்கள் தென்பட்டன. நன்னன் போன்றோர் தொடர்ந்து நற்றமிழை வலியுறுத்திவந்தனர். நிகழ் என்கின்ற அரசியல், இலக்கியம் பேசும் இதழைக் கொணர்ந்த கோவை ஞானி போன்றோர்கூட ‘தமிழ்நேயம்’ என்ற இதழைத்தான் பிற்காலத்தில் நடத்தினர். இதழாசிரியர்கள் தமிழ்க்கேடான எதனையும் வெளியிடத் துணிந்தாரில்லை. தவறாக ஒன்றை எழுதும் துணிவு இன்றுள்ளதுபோல் அன்றிருக்கவில்லை. ‘எழுதியதை வைத்து வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’ என்று தடித்தனமாக விளக்கும் எழுத்துச் செருக்கர்களும் இல்லை.
பிறகு மெல்ல வலைப்பூக்கள் மொக்கு விட்டன. முதலில் எழுதத் தெரிந்தவர்கள்தாம் அங்கு வந்தார்கள் என்று நான் நம்பவில்லை. கணினி தெரிந்தவர்கள்தாம் முதலில் வந்தார்கள். அங்கே ‘Filter bubble’ எழுத்துகள் இல்லை என்பதால் ஓரளவு எழுதவும் செய்தார்கள். அடுத்த பத்தாண்டுகள்தாம் இன்றுவரை பரந்திருக்கும் சமூக ஊடகங்களின் காலம். புதிது புதிதாய்ப் புறப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கினர். எண்ணிப் பாருங்கள், சமூக ஊடகம் என்பது மொழியை எழுத்தாலோ பேச்சாலோ தொடர்ந்து கையாளும் இடம். ஆடல் துண்டு என்றாலும் பின்னணியில் ஒரு பாடல் உண்டு. மொழிப் பரவலை ஆயிரம் மடங்கு மிகுதிப்படுத்தியுள்ள இந்தக் காலம் அதன் பிழைப் பரவலுக்கும் பெரும்பங்காற்றுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT