9 பிப்ரவரி - பாரம்பரிய விதைத்திருவிழா

9 பிப்ரவரி - பாரம்பரிய விதைத்திருவிழா

Published on

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி 'தேசியப் பாதுகாப்பான உணவு தினம்' கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ‘மரபணு அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பு’ பிப்ரவரி 9 அன்று சென்னையில் ஒரு பெரும் திருவிழாவை நடத்துகிறது.

மரபணு மாற்றமில்லா, பாரம்பரிய உணவுத் திருவிழா, விதைத்திருவிழா எனப்படும் அந்த நிகழ்வு வரும் வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் 8மணிவரை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலாயா பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் கீழ்க்கண்ட சிறப்பு அங்காடிகள் இடம்பெறுகின்றன:

  • மரபணு மாற்றமில்லா பாரம்பரிய விதை அங்காடிகள்
  • மரபணு மாற்றமில்லா இயற்கை வழி உணவு அங்காடி
  • மரபணு மாற்றமில்லா பாரம்பரிய பருத்தி அங்காடி
  • விதை பரிமாற்ற அங்காடி

சிறப்புப் பயிற்சி

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மருத்துவர் சிவராமன், நடிகை ரேவதி, திருமதி ஷீலா நாயர் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்வில் பல நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள். இந்த நிகழ்வின்போது, தமிழ் சிறுதானிய நாட்காட்டி வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு கை ராட்டை பயிற்சி வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இடம்: தக்கர் பாபா வித்யாலாயா, தி.நகர், சென்னை
நேரம்: 9 பிப்ரவரி, மதியம் 3 மணி முதல் 8 ம்ணிவரை
கூடுதல் தகவல்களுக்கு: 8939138207 / 9790900887
கூகுள் மேப்: https://goo.gl/maps/pAPTeLjzvCskG5898

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in